ஆவணி   உற்ஸவ விழா தேரோட்டம்

  தினமலர்
ஆவணி   உற்ஸவ விழா தேரோட்டம்



ராமநாதபுரம்- ராமநாதபுரம் அருகே பெருவயலில் உள்ள ரெணபலி முருகன் கோயிலில் ஆவணி மகா உற்ஸவ விழாவில் நேற்று காலை தேரோட்டம் நடந்தது.

பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில் ஆவணி உற்ஸவ விழா செப். 3 முதல் 14 வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு செப். 3ல் இரவு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை செய்து காப்புக்கட்டுதலும், செப். 4ல் காலையில் கொடியேற்றம் நடந்தது.

தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக செப்.10ல் சண்முகர் உற்ஸவமும், நேற்று (செப்.13) காலையில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் நிறைவாக இன்று (செப்.14) மாலை 6:00மணிக்கு ஆவணி மகா உற்ஸவம் நடைபெற உள்ளது.

ராமநாதபுரம்- ராமநாதபுரம் அருகே பெருவயலில் உள்ள ரெணபலி முருகன் கோயிலில் ஆவணி மகா உற்ஸவ விழாவில் நேற்று காலை தேரோட்டம் நடந்தது.பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில் ஆவணி உற்ஸவ விழா செப். 3

மூலக்கதை